Total Pageviews

Tuesday, October 25, 2011

ரசிக்கும் ரசிகர்கள்

சென்னை னா நமக்கு ஞாபகம் வர்றது காப்பி, பீச், ஸ்பென்சர் இன்னும் பல. சென்னை ல தியேட்டரும் பிரபலம். ஆரம்பத்துல காசினோ, பைலட் னு நிறைய உண்டு னு கேள்வி பட்ருக்கேன். இப்போ ரொம்ப பேமஸ் நம்ம சத்யம். பொதுவா தலைவர் படமோ, இல்ல தளபதி, தல படம் முதல் நாள் பாக்குறப்போ ரசிகர்களோட ஆட்டம் பாட்டம் எல்லாம் எல்லா ஊர்லயும், எல்லா திரை அரங்கிலும் நாம் பார்க்க கூடும். அது ஒரு தனி கொண்டாட்டம். அந்த மாதிரி இல்லாத திரைப்படங்கள நாம தியேட்டர் ல பாக்குறப்போ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அதாவது நல்ல காட்சிக்கு கை தட்டுறது, விசில் அடிக்கிறது னு இருந்தா தான் நமக்கு படம் பார்க்க நல்லா இருக்கும். மேலும் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை அல்லது அதில் உள்ள நகைச்சுவை போன்றவற்றை உணர்வோம்.

சென்னை ல இருக்குறவங்களுக்கு நல்லா தெரியும் எந்த தியேட்டர் ல போய் படம் பார்த்தா நான் சொல்ற இந்த ரெஸ்பான்ஸ் இருக்கும் னு. நான் அதை பீல் பண்ண ஒரு தியேட்டர் தான் அம்பத்தூர் ராக்கி தியேட்டர். என் நண்பர்களோட சேர்ந்து யாவரும் நலம் படம் பார்த்தோம். மாதவன் குக் புக் வாங்கி தரும் காட்சி, முக்கியமான நகைச்சுவை காட்சி எல்லாம் ஏதோ நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களோட சேர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை ஏற்படுதுச்சி. அந்த படத்துல ஒரு போலீஸ் கேரக்டர் வரும். அந்த கேரக்டர் பல சீன் ல பண்ற காமெடி எல்லாம் நல்லா இருக்கும்.

வானம் படத்துல சிம்பு-சந்தானம் காமெடி சீன் ஒன்னு உண்டு. சிம்பு நியூ இயர் தன் ஆளோட பெரிய ஹோட்டல் ல கொண்டாட பாஸ் வாங்க போவாரு. அப்போ, சந்தானம் சொல்ற ஒரு ஜோக் கு சிம்பு சிரிக்காம இருப்பாரு. அபோ சிம்பு சொல்லுவாரு, பணக்காரங்க எல்லாம் சிரிக்க மாட்டாங்க. ஆமா சிரிக்க மாட்டாங்க, அழ மாட்டாங்க, கை தட்ட மாட்டாங்க, விசில் அடிக்க மாட்டாங்க, இந்த மாதிரி எந்த நல்ல விஷயமும் பண்ண மாட்டாங்க. இதே தான் நா எந்திரன் ஐநாக்ஸ் ல பார்த்த போது ஆச்சு. தலைவர் படம் ஆச்சே, அதுவும் மூணாவது நாள் ஷோ. தலைவர் ரோபோவா முதல் முதலா நடக்குற காட்சி ல கூட அமைதியா இருக்குறாங்க. நானும் என் நண்பர்களும் தான் தனியா சத்தம் போட வேண்டியிருந்தது. அப்புறம் நம்ம எம் சிட்டி ல போட்டாங்க, தியேட்டர் ல பாக்குற அளவுக்கு இல்லாட்டியும், செம ரெஸ்பான்ஸ் ஓட பாக்க சூப்பரா இருந்துச்சு

இப்போ சமீபத்துல சத்யம் தியேட்டர் ல எங்கேயும் எப்போதும் பார்த்தோம். செம ரெஸ்பான்ஸ். படத்துல நல்ல காமெடி சீன்ஸ் உண்டு. எல்லாம் செமையா ரசிச்சோம். முக்கியமா அஞ்சலி, ஜெய் வர்ற சீன்ஸ். இது மாதிரி எனக்கு தெரிஞ்ச தியட்டர்கள் சத்யம், அம்பத்தூர் ராக்கி, காசி, சங்கம். ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் ஓடு ரசித்த படங்கள், வாரணம் ஆயிரம் காசியில், 2012 சங்கம் சினிமாஸில், 3 idiots & Angels & Demons ராக்கியில்.


ரசிச்சு பார்க்கலேனா நல்ல படம் கூட மொக்கையா தான் இருக்கும்.

0 comments:

Post a Comment