Total Pageviews

Tuesday, December 10, 2013

செம குத்து! செம ஆட்டம்! செம உற்சாகம்!

இந்த பதிவுல வர்ற ஆறாவது பாய்ண்ட் எங்க ஊர்ல நான் ரொம்ப ரசித்த ஒரு மலரும் நினைவு.


ஒவ்வொரு வருஷமும் பொங்கல் னு வரும் போது எங்க வீட்டு தெருவில், பல விதமான விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். அதுல மக்கள் எல்லோரும் ரொம்ப ஆவலா காத்திருப்பது நடனப் போட்டி. பொங்கல் வருவதுக்கு ரெண்டு வாரம் முன்னாடில இருந்து நான், எங்க அண்ணன், மற்றும் சக நண்பர்கள் சேர்ந்து டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுருவோம். என்ன பாட்டுக்கு ஆடலாம் னு யோசிப்போம். பசங்க எல்லாம் சேர்ந்து என்ன டூயட் சாங்குக்கா ஆட முடியும். எல்லாம் நம்ம தலைவர் பாட்டு தான் பைனலைஸ் பண்ணுவோம். தலைவர் னா நம்ம சூப்பர் ஸ்டார் தான். ஒரு காலத்துல அவரு படம் வருஷத்துக்கு ஒன்னு வந்துட்டு இருந்துச்சு. அவரு படத்துல வர்ற இன்ட்ரோ சாங் தான் நாங்க ஆடுவோம். நாங்க டான்ஸ் ஆடிய பாடல்களில் சில

1 . வந்தேண்டா பாலுக்காரன், அடடா அ, பசு மாட்ட பத்தி பாட போறேன் - அண்ணாமலை
2 . கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு, இந்த குமுடிப்பூண்டி கூட்ஸ் வண்டியில் ஏத்து - மன்னன்
3 . உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா - உழைப்பாளி.

ஒரு வருஷம் ஒரு சேஞ்சுக்கு வேறு நடிகர் பாடலுக்கு ஆடினோம். நம்ம இந்திய மைகல் ஜாக்சன் பிரபுதேவா வின் முக்காலா முக்காப்பல்லா பாட்டுக்கு ஆடினோம். இது போல குத்து பாடல்களுக்கு மட்டும் தான் மக்கள் செமையா என்ஜாய் பண்ணினாங்க எங்களுக்கும் குதூகலமா இருக்கும்.
சமீப காலமா சில பல தோல்விகளால் மக்களால் ஓட்டபடுபவர் விஜய். எப்போவுமே ஒருத்தர்கிட்ட இருக்குற நல்ல விஷயங்கள பத்தி பேசணும் னு சொல்லுவாங்க. எனக்கு மட்டும் இல்ல, பெரும்பாலனவர்க்கும் அவரிடம் ரொம்ப பிடித்தது அவருடைய நடனம். சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் அவரப் போல இன்ட்ரோ சாங் இருக்கும் னா அது விஜய் படத்துல தான். இப்போ எங்க தெருவுல பொங்கல் நடனப் போட்டிக்கு பசங்க சூஸ் பண்றது விஜய் பாடல்கள் தான். திருமலை படத்துல "தாம் தக்க தீம் தக்க தையத் தக்க கூத்து" பாட்டு, "கில்லி படத்துல சூரத்தேங்கா அட்ரா அட்ரா சூரியனை தொட்ரா தொட்ரா", போக்கிரி ல "ஆடுங்கடா என்ன சுத்தி நா அய்யனாரு வெட்டுக் கத்தி" போன்ற பாடல்கள் எடுத்துக் காட்டு. இந்த வருஷம் ஐ பி எல் கிரிக்கெட் போட்டி பார்க்க நான் ஸ்டேடியம் போயிருந்தேன்.
அங்கயும் சென்னை சூப்பர் கிங்க்சுக்கு பெரும்பாலும் விஜயின் குத்துப் பாடல்கள் தான் போடறாங்க. உண்மையிலேயே இந்த பாடல்கள் நம்மள உற்சாகப் படுத்துது னு நான் நினைக்குறேன். இப்போ சிம்பு, தனுஷ் னு பல பேரு இந்த குத்துப் பாடல்கள் படங்கள் ல வைத்தாலும், விஜயின் நடனத் திறமை உண்மையிலேயே செம.
ஸ்ட்ரீட் கிரிக்கெட்

நீங்க சின்ன வயசுல ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடி இருக்கீங்களா? அப்டி விளையாடுறப்போ வீட்ல பாட்டி திட்டுவாங்க. கிரிக்கெட் விளையாடனும் னா மைதானத்துக்கு போங்க டா னு. அதை எல்லாம் பொருட்படுத்தாம நடு தெருவில் நாங்க கிரிக்கெட் விளையாடி இருக்கோம். அப்டி விளையாடுறப்போ வீட்டு வெளியே ஏதாவது கண்ணாடி பொருட்கள் இருந்தா அவ்ளோ தான், காலி. அதுக்காகவே ஒரு எல்லை அமைத்துக் கொண்டு அதை தாண்டி த்ரூவா பந்து சென்றால் அவுட் என்று விதிமுறைகளை திருத்தி அமைத்து விளையாடுவோம். இப்படி விளையாடி பழகியதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் டிபென்சிவ் பேட்டிங் ஐ கற்றுக் கொண்டோம். அதான் ராகுல் திராவிடை போல் மொக்கை போடுவது. ஆனால் அப்போ கூட நமக்கு அவரு அளவுக்கு பொறுமை கிடையாது. கொஞ்சம் தூண்டுவது போல் பந்து போட்டால் அடிக்க வேண்டும் என்று தான் தோணும். அப்டி அடிக்குறப்போ சில சமயம் சிக்சர் போகும், சில சமயம் வீட்டு கண்ணாடி உடையும். அப்புறம் என்ன மான் கராத்தே தான். அப்ஸ்கான்ட்.

இப்போ சின்ன பசங்க எங்கள மாதிரி விளையாடுவாங்க. அப்போ எங்க வீட்டுக்குள்ள பந்து வந்துச்சுனா அவ்ளோ தான், பந்தை குடுக்குறதில்ல. ஹி ஹி ஒரு வீராப்பு தான் சின்ன பொடியன்களிடம்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஒரு நல்ல பயிற்சி மூல தனம் நம்ம விளையாடிய ஒன் பிச் கேட்ச் கிரிக்கெட். நம்மை சுற்றி பல பேர். அவர்களிடம் கேட்ச் குடுக்காமல் லாவகமாக பௌண்டரிகளை பெறுதல். இந்த விளையாட்டில் பொறுமையை கடை பிடிப்பவன் கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட ஒரு அடித்தளமாக இருக்கும். ஹ்ம்ம் நாம் இதெல்லாம் சொல்லிக்க நல்லா தான் இருக்கும், அனால் உண்மையில் இன்றைய நாளில் கிரிக்கெட்டில் நுழைவது அவ்வளவு எளிதல்ல.

Monday, October 14, 2013

பாஷை. . .

எல்லார்க்கும் வணக்கம். என்னோட ஊர் நாகர்கோவில். நாகர்கோவில் னு சொன்னதும் பலர் நினைவில் வருவது கன்னியாகுமரியும் அதன் அழகும் தான். எல்லாத்துக்கும் தன்னோட சொந்த ஊரு னா சொர்க்கம் தான். எனக்கும் அப்படி தான்.

என்னோட school days ல எங்க வீட்டு பக்கத்துல friends ஓட Street CRICKET விளையாடுவோம். அப்போல்லாம், "வால, போல" அப்டி னு பேசிட்டு தான் விளையாடுவோம். எங்க ஊரு பாஷை ல மலையாளம் கலந்த ஒரு தமிழ் உண்டு. For ex, ஒரு பொருள் தொலஞ்சு போச்சு னா, நாங்க எப்டி சொல்லுவோம் னா, "என்னோட watch களஞ்சு போச்சு" .

Actually speaking, கன்னியாகுமரி was a part of KERALA. இப்போ கூட எங்க ஊர்ல, November 1st school, college எல்லாம் leave விட்ருவாங்க. ஏனா அன்னிக்கு தான் கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட சேந்துச்சாம். பட், நாங்க use பண்ற சில வார்த்தைகள் நம்ம திருநெல்வேலிக் காரங்களோட ஒத்து போகும்.

நான் School முடிஞ்சு காலேஜ் கு கோயம்புத்தூர் போனேன். அங்க தான் பல பாஷைகள். ஒரு முறை என்னோட ரூம் ரொம்ப Dirty அ இருக்கு னு என் ரூம் மேட் (Saravanan from மதுரை) கிட்ட, வாரியல் இருக்கா னு கேட்டேன். அவன் திறு திறு னு முழிச்சுட்டு இருந்தான். ஹீ ஹீ, உங்கள் ல சிலர் முளிக்றீங்க போல இருக்கு. அது வேற ஒன்னும் இல்லீங்க. தொடப்பைய தான் நாங்க அப்டி சொல்லுவோம்.

திருநெல்வேலி லையும், எங்க ஊர் லையும் use பண்ற, சில COMMON WORDS that are not used in other places in தமிழ்நாடு.

சாபிட்ற பொருள்கள் ல

எங்க ஊர்ல(Also திருநெல்வேலி)----------Others

அண்டி பருப்பு -------------------------- முந்திரி பருப்பு
கிஸ்மிஸ் -------------------------- முந்திரி பழம்
சீனி -------------------------- சக்கரை
சக்கப்பழம் -------------------------- பலாப்பழம்
ஏத்தம்பழம் -------------------------- நேந்தரம் பழம்

என் college ல friends கிட்ட பாஷை நால அவமானப் பட்டது ரொம்ப அதிகம். அப்புறம நம்ம திருநெல்வேலி friends நிறைய கிடச்சாங்க. அவங்கக் கூட ஒரு gang form பண்ணி terrora கூட்டினோம். அது ஒரு அழகிய கனாக்காலம்.